Box Office
ரெண்டாம் நாளே பெரும் வசூல் சாதனை.. பட்டையை கிளப்பிய எம்புரான்.!
நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். வெளியாகி 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் பெரும் வசூலை பெற்று இருக்கிறது.
ஏற்கனவே ப்ரித்திவிராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இதில் ஸ்டீபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அதிக வரவேற்பை பெற்ற அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்துதான் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படத்தை அதிக பட்ஜெட்டில் படமாக்கினர். மலையாள சினிமாவை பொருத்தவரை அதிக பட்ஜெட்டில் திரைப்படங்கள் வருவது மிகவும் குறைவு.
ஏனெனில் மலையாள சினிமா இன்னும் தமிழ் அல்லது தெலுங்கு சினிமா அளவிற்கான வசூல் வேட்டையை பெறவில்லை. மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் படைத்த திரைப்படங்கள் குறைவாகதான் இருக்கின்றன.
இந்த நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது எம்புரான் திரைப்படம். முதல் நாள் இந்த திரைப்படம் 67.5 கோடி வசூல் செய்து இருந்தது.
மொத்தமாக 100 கோடி வசூல் செய்த மலையாள படங்கள் 9 இருக்கின்றன தற்சமயம் அதில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது எம்புரான் திரைப்படம்.
