News
ஒரு மாச படப்பிடிப்பை முடித்து பேக்கப் செய்த எதிர்நீச்சல்!.. எல்லாம் வீட்டுக்கு கிளம்பியாச்சா..!
சன் டி.வியில் பிரபலமாக இருந்து வரும் டிவி தொடரில் எதிர் நீச்சல் சீரியல் முக்கியமான தொடராகும். சன் டி.வியின் பிரபல சீரியல் தொடர் இயக்குனரான திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் சீரியல் உருவானது.
எதிர்நீச்சல் சீரியல் உருவான பொழுது அதற்கு முதலில் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் போக போக அதில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து மக்களை கவரும் வகையில் நடித்ததை தொடர்ந்து அந்த சீரியல் பிரபலமாக துவங்கியது.

இதில் ஜனனி என்கிற ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வைத்து கதை நகர்வதாக இருக்கும். இந்த நிலையில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து இடையிலேயே இயற்கையை எய்தியதை அடுத்து அவருக்கு பதிலாக நடிகர் வேலராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தொடங்கினார்.
அவர் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அந்த சீரியலுக்கு இருந்த வரவேற்பு குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து தற்சமயம் அந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கின்றனர்.

அடுத்த மாதம் ஆரம்பத்தில் இந்த சீரியல் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. அதற்கு இடையே அந்த சீரியலில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களின் முன்னேற்றங்களை காட்டுவதுதான் இந்த ஒரு மாத எபிசோடாக இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே சீரியலுக்கான மொத்த படப் பிடிப்பையும் முடித்து விட்டனர். மேலும் இந்த நிலையில் ஏற்கனவே 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் இனி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. அதுபோல இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சிங்க பெண்ணே சீரியலை 9 மணிக்கு மாற்றி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
