வடிவேலு ஃபகத்ஃபாசில் கூட்டணியில் அடுத்து ஒரு படம்.. செம அப்டேட்டா இருக்கே!..
தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. வடிவேலு காமெடிகள் கிட்டத்தட்ட பல காலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
ஆனால் தற்சமயம் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் வடிவேலு குறித்த மொத்த பார்வையையுமே மாற்றி விட்டது என கூறலாம். அதுவரை சீரியஸாக எந்த கதாபாத்திரமும் நடிக்காத வடிவேலு முதல் முறையாக மாமன்னன் திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரமாக நடித்தார்.
சொல்லப்போனால் அந்த மாமன்னன் என்கிற பெயரே வடிவேலுவின் பெயர்தான். வடிவேலுதான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறலாம். முக்கியமாக அவ்வளவு சீரியஸான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருந்தார் வடிவேலு.

அந்த படத்தில் ஃபஹத்ஃபாசில் மற்றும் வடிவேலுவின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி சௌத்ரி தற்சமயம் இவர்கள் இருவரையும் சேர்த்து ஒரு திரைப்படத்தை பண்ணலாம். என்று முடிவு செய்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டுள்ளன புது இயக்குனர் ஒருவர்தான் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக ஆர்.பி சௌத்ரி புதிதாக ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு அளிக்கிறார் என்றால் நிச்சயமாக அந்த இயக்குனர் நல்ல இயக்குனராகவே இருப்பார்.
ஏனெனில் திருப்பாச்சி திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் பேரரசுக்கு வாய்ப்பு கொடுத்தவர் ஆர்.பி சௌத்ரிதான். எனவே இந்த படம் சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது இப்பொழுதே இது குறித்து மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.