திரையரங்கில் ஸ்கிரினை கிழித்து சம்பவம் செய்த ரசிகர்கள் – இதெல்லாம் தப்பிலையா?

வெகுநாட்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்து திரையில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் திருச்சிற்றம்பலம். இன்று வெளியான முதல் நாளே ஓரளவு நல்ல விதமான விமர்சனங்களையே பெற்று வருகிறது இந்த படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் உள்ளனர். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் மூவரும் இதில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிரூத் இதற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளே ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் சினிமா ரசிகர்கள். 

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கம் சென்னையில் பார்ப்பதற்கு லக்சரி லுக்கில் இருக்கும் திரையரங்கம் ஆகும். வெற்றி மாறன், தனுஷ், நயன்தாரா போன்ற திரை பிரபலங்களே அங்கு படம் பார்க்க வருவதுண்டு.

இன்று திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் தனுஷ் மற்றும் அனிரூத் இருவரும் இந்த திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை பார்த்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் பார்க்க வந்தவர்களில் யாரோ இந்த திரையரங்கில் உள்ள திரையை கிழித்துள்ளனர்.

திரையின் மூன்று பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ”ஓ.டி.டியில் வரும்போது உங்கள் வீட்டு டிவியை உடையுங்கள் யார் கேட்க போகிறார்கள். எதற்கு திரையரங்குகளை சேதப்படுத்துகிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Refresh