3 ஜோடிகள் படம் எப்படி இருக்கு திருச்சிற்றம்பலம் – பட விமர்சனம்

நடிகர் தனுஷிற்கு வரிசையாக ஓ.டி.டியில் மட்டுமே படங்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு திரையில் வந்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு என்பதை இப்போது பார்க்கலாம்.

பல படங்களில் வருவது போல இந்த படத்திலும் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக தனுஷ் இருக்கிறார். டெலிவரி பாயாக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் நித்யா மேனன் இருக்கிறார். இவரும் நித்யா மேனனும் வெகு நாள் நண்பர்களாக இருக்கின்றனர். சில காரணங்களால் தனுஷ்க்கும் அவரது தந்தை பிரகாஷ் ராஜுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில் தனுஷூன் வாழ்க்கைக்குள் இரண்டு பெண்கள் வருகின்றனர். உணர்வு பூர்வமாக அவர்களுடன் தனுஷ்க்கு ஒரு உறவு ஏற்படுகிறது. அதன் பிறகு அந்த உறவுக்குள் ஏற்படும் சிக்கல்கள் முடிவில் அவரது காதல் வாழ்வு யாரோடு அமைகிறது என கதை செல்கிறது.

படத்தில் கதாநாயகிகள் மூவருமே தங்களுக்கு அளித்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தனர். தனுஷ் நடிப்பை பற்றி தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. வழக்கம் போலவே தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி இருந்தார்.

ஏற்கனவே ஹிட் அடித்த அனிரூத் பாடல்கள் திரையில் கேட்கும்போது இன்னுமுமே பிரமாதமாக இருந்தது. படத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை நம்மால் ஓரளவு அனுமானிக்க முடிந்தாலும் கூட கதையின் ஓட்டம் வேகமாக செல்வதால் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாக திருச்சிற்றம்பலம்.

மொத்தமாக குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு ஏற்ற ஒரு டீசண்டான கமெர்ஷியல் படமாக திருச்சிற்றம்பலம் உள்ளது என கூறலாம்.

Refresh