News
நடிகையை காதலிக்கணும்னு அந்த இடத்தில் அறுத்துக்கொண்ட நெட்டிசன்!.. அதிர்ச்சியான சீரியல் நடிகை..
வெகு காலங்களாக டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்காற்றி வருபவராக நடிகை ஃபரீனா அசாத். விஜய் டிவி, சன் டிவி, ராஜ் டிவி ஆகிய சேனல்களில் வெவ்வேறு வகையான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்காற்றி கொண்டு வருகிறார்.
ஸ்டார் விஜய்யில் வெளியான பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாகதான் இவர் அதிகமாக பிரபலமானார். 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு நிமிடம் ப்ளீஸ் நிகழ்ச்சி மூலமாகதான் இவர் முதன் முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

ஃபரீனாவுக்கு வந்த வாய்ப்பு:
அதனை தொடர்ந்து கோலிவுட் அன்கட், கிட்சன் கலாட்டா ஆகிய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தார் ஃபரீனா அசாத். இந்த நிலையில் சன் டிவியில் வெளியான அழகு சீரியல் மூலமாக முதன் முதலாக சீரியல் நாயகியாக அறிமுகமானார் ஃபரீனா.
அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய நாடகங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. 2019 ஆம் ஆண்டு அவர் நடித்து வந்த பாரதி கண்ணம்மா சீரியல் அவருக்கு அதிக புகழை தேடி தந்தது.
சீரியலில் முன்னேற்றம்:

இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அவர் பதிவுகளை இட்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு இளைஞன் தொடர்ந்து இன்ஸ்டாவில் ஃபரீனாவிடம் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் அந்த இளைஞரை சமாளிப்பதற்காக நான் முஸ்லீம் இளைஞரைதான் திருமணம் செய்துக்கொள்வேன் என கூறியிருந்தார் ஃபரீனா. ஆனால் அந்த இளைஞர் அந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு நிஜமாகவே முஸ்லீம்கள் செய்யும் சுன்னத்தை செய்து கொண்டு வந்து மீண்டும் தன்னை காதலிக்கும்படி கேட்டுள்ளார்.
அந்த லவ் ப்ரோபோசலை என் வாழ்வில் மறக்க முடியாது என்கிறார் ஃபரீனா.
