என்ன நடிகருங்க அவரு? – அந்த சிவாஜி படத்தை பார்த்து அதிர்ந்து போன வெள்ளைக்காரர்கள்!
நடிகர் திலகம் என்கிற பட்டத்திற்கு ஏற்ப சிவாஜி கணேசன் அவர் வாழ்ந்த சம காலத்தில் அவருக்கு நிகராக ஒரு நடிகரை குறிப்பிட முடியாத அளவிற்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். இதனால் அப்போது இந்தியா முழுவதும் சிவாஜி கணேசனின் புகழ் பரவியிருந்தது.
முக்கியமான ரிமேக் படங்களில் சிவாஜி மிகவும் பிரபலமடைந்தார். வேறு மொழிகளில் வருகிற திரைப்படங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் தமிழில் ரீமேக் செய்யப்படும். ஆனால் அப்படி செய்யப்படும் ரீமேக்குகளில் சிவாஜி கணேசன் நடிக்கும்போது அது சிறப்பான படமாக வந்துவிடுவதுண்டு.
அப்படியாக வெளிநாட்டில் இருந்து வந்த சில வெள்ளையர்களையே வியக்க வைத்துள்ளது ஒரு சிவாஜி கணேசனின் பாடல். எத்தியோப்பியா, சுவிச்சர்லாந்து, ஆபிகானிஸ்தான் மூன்று நாடுகளை சேர்ந்த நண்பர்கள் இந்தியாவை சுற்றி பார்க்க வந்திருந்தனர். அப்போது அவர்கள் சென்னக்கும் வந்திருந்தனர்.

சென்னைக்கு வந்த நண்பர்கள் அருகில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கலாம். அதன் மூலம் இந்த ஊர் சினிமா எப்படி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள முடியும் என திரையரங்கிற்கு சென்றுள்ளனர். அங்கு சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும் படம் ஓடியுள்ளது.
அதை பார்த்தவர்கள் சிவாஜியின் நடிப்பை கண்டு பிரமித்துவிட்டனர். உடனே மறுநாள் சிவாஜியின் வீட்டை கண்டறிந்து அங்கு வந்தனர். நேற்று சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும் என்கிற படத்தை பார்த்தோம். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி. எனவே அவரை பார்த்துவிட்டு போகலாம் என வந்தோம் என கூறியுள்ளனர். அப்படியாக ஒரு அங்கீகாரத்தை உலக மக்களிடம் பெற்றவர் சிவாஜி கணேசன்.