Connect with us

உன்ன மட்டும் படத்துல சேர்த்துக்கவே மாட்டேன் டாடி!.. கோட் திரைப்படத்தில் கங்கை அமரனை ஒதுக்கிய வெங்கட் பிரபு!. இதுதான் காரணம்!.

gangai amaran goat

News

உன்ன மட்டும் படத்துல சேர்த்துக்கவே மாட்டேன் டாடி!.. கோட் திரைப்படத்தில் கங்கை அமரனை ஒதுக்கிய வெங்கட் பிரபு!. இதுதான் காரணம்!.

Social Media Bar

GOAT Movie Update: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வெங்கட் பிரபு ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற மாஸ் ஹிட் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். மங்காத்தா திரைப்படமானது அஜித்திற்கு மிக முக்கியமான திரைப்படமாக இருந்தது. மங்காத்தா திரைப்படம் வெளியாகி வெற்றி கொடுத்தப்போது அதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தனக்கு ஆசையிருந்ததாக விஜய் கூறியிருந்தார்.

அப்போது முதலே அவருக்கு வெங்கட் பிரபு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசை இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கோட் திரைப்படத்தில் விஜய் பாடும் பாடல் ஒன்று உள்ளது. அதே போல அந்த பாடலுக்கு வரிகளை கங்கை அமரனே எழுதியிருக்கிறார் என கூறப்படுகிறது.

vijay GOAT
vijay GOAT

சமீபத்தில் கங்கை அமரன் ஒரு பேட்டியில் பேசும்போது கோட் திரைப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். கோட் திரைப்படம் எதிர்பார்த்ததை விட நன்றாக வருவதாக அவர் கூறினார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிரபு மட்டும் கொஞ்சம் சோகமாக இருந்துள்ளார்.

என்ன காரணமென்று கேட்கும்போது உதவி இயக்குனர்கள் சரியாக வேலை பார்க்கவில்லை என கூறியுள்ளார் வெங்கட்பிரபு. உடனே அப்படியென்றால் நான் வரவா என கங்கை அமரன் கேட்டுள்ளார். சும்மா இருப்பா நீ வந்தா நாங்க தண்ணி அடிக்க முடியாது, சிகரெட் புடிக்க முடியாது என கூறியுள்ளார் வெங்கட் பிரபு. இந்த விஷயத்தை கங்கை அமரன் அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top