Connect with us

ரஜினிக்கே பிரச்சனை இல்ல.. உனக்கு என்ன போயா!.. இயக்குனரை திட்டி அனுப்பிய கவுண்டமணி!..

rajini gaundamani

Cinema History

ரஜினிக்கே பிரச்சனை இல்ல.. உனக்கு என்ன போயா!.. இயக்குனரை திட்டி அனுப்பிய கவுண்டமணி!..

Social Media Bar

Gaundamani : பொதுவாக கவுண்டமணியை குறித்து கூறும் பலரும் கூறும் விஷயம் என்னவென்றால் கவுண்டமணி அனைவரிடமும் வம்பு செய்து விடுவார் என்பதுதான். கவுண்டமணிக்கு ஒருவரை பற்றி மூடி மறைத்து பேசவெல்லாம் தெரியாது.

அவர்களது முகத்திற்கு முன்பே தனக்கு தோன்றுவதை பேசக்கூடியவர் கவுண்டமணி. இதனால்தான் சினிமாவில் பல பட வாய்ப்புகளை இழந்தார் கவுண்டமணி. கமல்ஹாசனுக்கும் கவுண்டமணிக்கும் சண்டை ஏற்பட்டதற்கு கூட இந்த மாதிரியான நிகழ்வு ஒன்றுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக கவுண்டமணி அவரது திரைப்படத்தில் நடிக்கும் எல்லா நடிகர்களையும் போ.. வா என்றுதான் அழைப்பாராம். போங்க வாங்க என்றெல்லாம் மரியாதை கொடுத்து அழைக்க மாட்டார். ரஜினிகாந்தாக இருந்தாலும் அப்படித்தான் அழைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எஜமான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது தொடர்ந்து கவுண்டமணி ரஜினிகாந்தை போ..வா என்று அழைத்து வந்தார் பொதுவாகவே கவுண்டமணி அப்படித்தான் அழைப்பார் என்பதால் ரஜினிகாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த விஷயம் படத்தின் இயக்குனரான ஆர்.வி உதயகுமாருக்கு சங்கடமாக இருந்தது.

பொது இடத்தில் ரஜினிகாந்தை மரியாதை இன்றி அழைக்கிறார் கவுண்டமணி என்று நினைத்த அவர் கவுண்டமணியிடம் சென்று ரஜினியை கொஞ்சம் மரியாதையாக கூப்பிடுங்கள் எனக்கு நீங்கள் மரியாதையின்றி அவரை அழைப்பது கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. அவர் எதுவும் சொல்லவில்லை என்றாலும் கூட அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா என்று கூறியிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த கவுண்டமணி ரஜினிக்கே எந்த பிரச்சனையும் இல்லை எனும்போது உனக்கு என்ன பிரச்சனை நான் இப்பொழுது படத்தில் நடிக்க வேண்டுமா இல்லையா என்று சத்தம் போட்டுவிட்டு சென்றிருக்கிறார்.

To Top