News
விஜயாலதான் அந்த படத்தை பண்ண முடியாம போச்சு!. விஜய்க்காக காத்திருக்கும் கௌதம் மேனன்.
தமிழ் திரையுலக நாயகர்களில் முக்கியமானவர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்சமயம் வந்த லியோ திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் கொஞ்சம் ஜாலியான திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம். லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் இயக்குனர் கௌதம் மேனன்.

கௌதம் மேனனை பொறுத்தவரை வெகு நாட்களாக அவர் விஜய்க்காக ஒரு கதையை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டுள்ளார். யோகன் என்கிற அந்த திரைப்படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியானது. ஆனால் விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை.
ஆனால் அந்த படத்தை விஜய்யை வைத்து எடுக்க வேண்டும் என்கிற கௌதம் மேனனின் ஆசை மட்டும் இன்னும் போகவில்லை. இதனை வெந்து தணிந்தது காடு திரைப்படம் வந்தப்போது கூட கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். விஜய் ஒப்புக்கொண்டால் அந்த படம் கண்டிப்பாக வரும் என கூறியுள்ளார் கௌதம் மேனன்.
முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கவிருக்கும் இந்த படம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது.
