Tamil Cinema News
அடங்கவும்… மேனன் என்பது சாதி பெயர் இல்லை… நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த கௌதம் மேனன்.!
க்ரைம் த்ரில்லர் காதல் படங்களை எடுப்பதில் பிரபலமான இயக்குனராக கௌதம் மேனன் இருந்து வருகிறது. கௌதம் மேனனை பொறுத்தவரை படத்தில் எவ்வளவு அழகாக காதலை வைக்கிறாரோ அதே அளவில் சிறப்பாக க்ரைம் கதைகளை வைத்துவிடுவார்.
வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் எல்லாம் படம் முழுக்க காதல் மட்டுமே இருக்கும். ஆனால் காக்க காக்க மாதிரியான படங்களில் காதலுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும். இயக்குனர் மணிரத்தினத்தின் திரைப்படத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர் கௌதம் மேனன்.
அதனால் அந்த தாக்கத்தை அவரது திரைப்படங்களிலும் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் ஏன் சமூக நீதி படங்களை எடுப்பதில்லை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் சாதி பிரச்சனைகளை கதையாக வைத்து படம் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இப்போது எல்லாம் சாதி பிரச்சனைகள் அதிகமாக இல்லை என கூறியிருந்தார். சாதிய பிரச்சனைகளை காட்டும் படங்கள் கூட பல காலங்களுக்கு முன்பு நடந்ததாகதான் காட்டுகிறார்கள். அதை இப்போது காட்ட தேவையில்லை என நினைக்கிறேன் என கூறியுள்ளார் கௌதம் மேனன்.
இந்த நிலையில் இதுக்குறித்து கேட்கும் ரசிகர்கள் சாதி இல்லை என்றால் எதற்கு உங்கள் பெயரிலேயே மேனன் என்கிற சாதி பெயரை வைத்துள்ளீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் அதை என்னுடைய சாதி பெயராக பார்க்கவில்லை. என்னுடைய குடும்ப பெயராகவே பார்க்கிறேன் என கூறியிருந்தார்.
ஆனால் இடைநிலை சாதியாக இருப்பதால்தான் கௌதம் மேனன் , மேனன் என்கிற தன்னுடைய சாதி பெயரை போட்டு கொள்கிறார். இதுவே தாழ்த்தப்பட்டவராக இருந்தால் இப்படி விரும்பி போட்டுக்கொள்வாரா என்பது ஒரு பக்கத்தினர் வாதமாக இருக்கிறது.
