Connect with us

சூர்யாவை வச்சி ஹாலிவுட்டில் படமெடுக்க ப்ளான் பண்ணுனேன்!.. கௌதம் மேனன் போட்ட திட்டம்!.

gautham menon surya

Cinema History

சூர்யாவை வச்சி ஹாலிவுட்டில் படமெடுக்க ப்ளான் பண்ணுனேன்!.. கௌதம் மேனன் போட்ட திட்டம்!.

Social Media Bar

Gautham Menon : தமிழ் சினிமாவில் மணிரத்தினத்திற்கு பிறகு காதல் கதைகளை சிறப்பாக இயக்கக்கூடிய இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே. நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா,  வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் எல்லாமே தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை கொடுத்தவை.

காதல் கதை கொண்ட திரைப்படங்களிலும் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்க முடியும் என்பதை மணிரத்தினத்திற்கு பிறகு கௌதம் தெரிவித்திருக்கிறார் அதேபோல இன்னும் சில படங்களில் காதலுடன் சேர்த்து க்ரைம் த்ரில்லராகவும் இயக்கியிருப்பார் கௌதம் மேனன்.

அவரது திரைப்படங்களுக்கு எப்போதும் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. அதே சமயம் கௌதம் தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அவரது நடிப்புக்கும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. சூர்யாவை வைத்து அவர் இயக்கிய காக்க காக்க திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் என்று கூறலாம்.

அந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக அப்போதே பலரும் கூறிய காரணத்தினால் இந்த திரைப்படத்தைக் ஹாலிவுட்டில் எடுத்தால் என்ன என்று முடிவு செய்தனர். இதனை எடுத்து சூர்யாவை கதாநாயகனாக வைத்து முதலில் அந்த திரைப்படத்தை ஹாலிவுட்டில் எடுக்க திட்டமிட்டனர். ஆனால் பிறகு ஹாலிவுட் கதாநாயகன் ஒருவரை வைத்து எடுக்கலாம் என்று திட்டமிட்டு அதற்காக இரண்டு மாதங்கள் ஹாலிவுட் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பிறகு எதுவும் கைகூடி வராததால் அதை விடப்பட்டது இல்லை என்றால் ஹாலிவுட் தரத்தில் மீண்டும் காக்க காக்க திரைப்படத்தை எடுத்திருப்போம் என்று கூறுகிறார் கௌதம்மேனன்.

To Top