Tamil Cinema News
சூர்யாவை பழி தீர்க்கும் கௌதம் மேனன்.. மே 1 ஆம் தேதி சம்பவம் இருக்கு.!
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவிற்கு வாரணம் ஆயிரம் மற்றும் காக்க காக்க என்று இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். இப்படி பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்களுடன் எல்லா நடிகர்களும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவார்கள்.
ஆனால் சூர்யாவை பொருத்தவரை அடுத்து கௌதம் மேனன் இயக்கிய திரைப்படத்தில் நடிக்கவில்லை. அது வேறு எந்த திரைப்படமும் இல்லை துருவ நட்சத்திரம் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் சூர்யா அந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு அதற்கு நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு பல நடிகர்களிடம் இது குறித்து பேசினார் கௌதம் மேனன். ஆனால் நிறைய நடிகர்கள் இந்த படத்தை நிராகரித்துவிட்டனர்.
இந்த நிலையில்தான் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு விக்ரம் ஒப்புக்கொண்டார். படத்தின் படப்பிடிப்புகளும் நடந்து முடிந்தது பல வருடங்கள் ஆன பிறகும் கூட இன்னும் அந்த படம் மட்டும் வெளியாகாமலே இருக்கிறது. தயாரிப்பாளர் பக்கமிருந்து அந்த படத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த வருடம் எப்படியாவது அந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கௌதம் மேனன் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் வருகிற மே 1ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
அதே தேதியில்தான் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது கௌதம் மேனன் வேண்டும் என்றே சூர்யாவை பழி வாங்குவதற்காக இப்படி செய்கிறாரா என்று இது குறித்து மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
