சூர்யா என்னை நம்பியிருக்கலாம்.. அந்த ஒரு முடிவால் மனம் வருந்திய இயக்குனர்..
நடிகர் சூர்யா ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தார். விஜய் அஜித்துக்கு இணையான ஒரு மார்க்கெட் சூர்யாவுக்கும் இருந்தது. ஆனால அவர்கள் இருவரையும் போல தொடர்ந்து சண்டை படங்களாக நடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் சூர்யா.
அப்படியாக அவர் நடித்த மாயாவி, பேரழகன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் வரவேற்பை பெற்றாலும் கூட விஜய் அஜித்திற்கு கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டை இந்த படங்கள் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சூர்யா நடித்த படங்களில் அவருக்கு நிறைய வெற்றி படங்கள் இருந்து வருகின்றன. அப்படி சூர்யாவிற்கு வெற்றி கொடுத்த இயக்குனர்களில் இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கியமானவர்.

கௌதம் மேனன் சூர்யாவிற்கு காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு திரைப்படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் இதுக்குறித்து கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது முதலில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யாவிடம்தான் கேட்டேன். ஆனால் அவர் அதில் நடிப்பதற்கு மறுத்துவிட்டார். பிறகுதான் அந்த படத்தில் விக்ரமை நடிக்க வைத்தோம்.
வேறு எந்த நடிகராவது மறுத்திருந்தாலும் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் நான் சூர்யாவிற்கு இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளேன். அதனால் அவர் என்னை கொஞ்சம் நம்பியிருக்கலாம் என பேசியிருந்தார் கௌதம் மேனன்