Connect with us

ஜெய்சங்கருக்கு வரவிருந்த பட வாய்ப்பு… அதை அடித்து தூக்கிய ஜெமினி கணேசன்.. இதெல்லாம் நியாயமே இல்ல தெரியுமா!..

jai shankar gemini ganesan

Cinema History

ஜெய்சங்கருக்கு வரவிருந்த பட வாய்ப்பு… அதை அடித்து தூக்கிய ஜெமினி கணேசன்.. இதெல்லாம் நியாயமே இல்ல தெரியுமா!..

Social Media Bar

Gemini Ganesan : தமிழ் சினிமாவில் திரைப்பட வாய்ப்பிற்கான போட்டி என்பது எல்லா காலங்களிலும் நடந்து வந்து கொண்டிருந்தது. முக்கியமாக ஒரு நல்ல திரைக்கதை படமாக்கப்படுவதற்காக இருக்கும்பொழுது அதைக் கேள்விப்பட்டவுடன் மற்ற நடிகர்கள் அதில் நடிக்க ஆசைப்படுவதும் உண்டு.

ஜெய்சங்கர் நடித்த ஒரு திரைப்படத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி நடித்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. திரைப்படத்தின் பெயர்களுக்கு ராசி உண்டு என்று ஒரு எண்ணம் திரைப்பட சமூகத்தில் இருந்தது. அப்போது ராமு என்கிற பெயரில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

எனவே தமிழிலும் ராமு என்கிற ஒரு திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டார் ஏவி மெய்யப்ப செட்டியார். இந்த திரைப்படத்திற்கு ஜெய்சங்கரை கதாநாயகனாக பேசினார். ஏனெனில் இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படமாக இருந்தது. அப்போதுதான் ஜெய்சங்கர் புதிய நடிகராக அறிமுகம் ஆகியிருந்ததார்.

ramu
ramu

அவர் குறைவான சம்பளத்தில் நடிக்க தயாராக இருந்தார். எனவே அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் ஏ.வி மெயப்ப செட்டியார். இந்த நிலையில் அந்த கதையை கேள்விப்பட்ட ஜெமினி கணேசனுக்கு அது மிகவும் பிடித்து விட்டது.

உடனே அவர் ஏ.வி மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் ஜெமினி கணேசன் நடித்த திரைப்படங்கள் பலவும் தோல்வியை கண்டறிந்தன. எனவே ஜெமினி கணேசனுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றிய யோசனையில் இருந்தார்.

மேலும் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டி இருக்குமே என்ற கவலையும் இருந்தது எனவே அவர் இந்த படம் குறைந்த பட்ஜெட் படம் இதற்கு என்னால் அதிக சம்பளம் வழங்க முடியாது. எனவே தான் உங்களை இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதனை கேட்ட ஜெமினி கணேசன் பரவாயில்லை நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை கொடுங்கள். ஆனால் நான் இந்த திரைப்படத்தில் நடித்தே ஆக வேண்டும் எனக் கூறியிருக்கிறார் பிறகு ஜெமினி கணேசன் தான் அது திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படமும் பெரும் வெற்றியை கொடுத்தது.

To Top