மறு வெளியீட்டிலும் பட்டையை கிளப்பிய கில்லி!.. முதல் நாள் வசூல் நிலவரம்!.

தற்சமயம் பாராளுமன்ற தேர்தல் நடந்து வந்த காரணத்தினால் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது. அதே சமயம் விடுமுறை நாட்கள் என்பதால் பலரும் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்காக முன்பு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படங்களை மீண்டும் இப்போது வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று விஜய் நடித்து 2004 இல் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த கில்லி படத்தை வெளியிட்டனர். கில்லி படத்தை பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் அதை திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Social Media Bar

இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இந்த மறு வெளியீடு அமைந்துள்ளது. படத்தின் ஆன்லைன் புக்கிங்கில் மட்டுமே 32000 டிக்கெட்டுகள் புக்கிங் ஆகி இருந்தன. இந்த நிலையில் நேற்று முக்கால்வாசி தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன.

குறைந்த கட்டணத்தில் படத்தை வெளியிட்டும் கூட நேற்று மட்டும் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது கில்லி திரைப்படம். இப்படியே 100 கோடி வசூல் செய்யும் பட்சத்தில் மறு வெளியீட்டு திரைப்படங்களில் கில்லி புது சாதனையை படைக்கும்.