News
முதல் நாள் வசூலில் ரஜினி, சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய கில்லி!.. அட துயரத்த!..
2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கிய இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையிலேயே முக்கியமான திரைப்படம் என கூறலாம்.
வித்தியாசாகரின் இசை இந்த படத்திற்கு கூடுதல் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கில்லி வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று மீண்டும் கில்லி திரைப்படம் மறு வெளியீடு ஆனது.

கில்லி வெளியாகிறது என தெரிந்ததுமே 90ஸ் கிட்ஸ் எல்லாம் டிக்கெட் புக் செய்ய துவங்கிவிட்டனர். இதனால் கிட்டத்தட்ட 30000 டிக்கெட்டுகள் ஏற்கனவே புக்கிங் ஆகிவிட்டன. இந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் கில்லி திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஒரு மறு வெளியீடு திரைப்படத்திற்கு இது அதிக தொகை ஆகும். ஆனால் ரஜினி நடித்த லால்சலாம் திரைப்படமே முதல் நாள் 7.60 கோடிதான் வசூல் செய்தது. அதே போல சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் 7.30 கோடிதான் வசூல் செய்துள்ளது.
ஆனால் மறுவெளியீடு ஆன நிலையிலும் கூட இப்படியொரு வசூல் சாதனை செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் சம்பவமாக அமைந்துள்ளது.
