Connect with us

கோட் படம் எப்படி இருக்கு.. படத்தை பார்த்தவர்கள் கொடுத்த முதல் விமர்சனம்!.

GOAT

News

கோட் படம் எப்படி இருக்கு.. படத்தை பார்த்தவர்கள் கொடுத்த முதல் விமர்சனம்!.

Social Media Bar

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு கோட் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிக அளவில் எழுந்திருக்கிறது.

மறுபுறம் நடிகர் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டு அரசியலில் முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க போகிறார் என்ற செய்தியும் ரசிகர்களுக்கு கிடைத்து. எனவேஅவர் நடித்த படங்களை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதற்காக கோட் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கோட் படத்தில் முதல் விமர்சனம் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோட் திரைப்படம்

இந்த திரைப்படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, வைபவ், ஜெயராம், பிரேம்ஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

GOAT vijay

இந்நிலையில் தணிக்கை குழு படத்தை பார்த்துவிட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படத்தைப் பற்றி கூறியிருக்கும் தகவலும் கசிந்து உள்ளது.

கோட் படத்தின் விமர்சனம்

இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் கேமியோவும், விஜயகாந்த் ஏஐ மூலம் வருவது என எக்கச்சக்க எதிர்பாராத விஷயங்களும் கோட் படத்தில் ரசிகர்களை கவருவதற்காக காத்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் பார்க்கும் பொழுது ரோலர் கோஸ்டர் ரைடு போனது போலவே இருக்கும் என்ற தகவலும் தற்போது கசிந்து இருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கை குழு படம் ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை எந்த இடத்திலும் லாக் இல்லாமல் ஜெட் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாக பாராட்டியதாகவும், படத்தில் வயதான விஜய் , இளமையான விஜய் , நடுத்தரமான வயது விஜய்யாக நடித்திருப்பது ரசிகர்களை நிச்சயம் கவரும் எனவும் படக்குழுவினரை பாராட்டியதாக தகவல் கூறப்படுகிறது.

goat movie

மேலும் இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் நல்ல வசூலை கொடுக்கும் எனவும் அவர்கள் பாராட்டியதாக தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. படத்தின் டிரைலர் பார்த்துவிட்டு அஜித் பாராட்டியதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

To Top