Connect with us

விஜய்யின் புதிய படத்தில் இணையும் விஜயகாந்த்? அது எப்படி குமாரு?

News

விஜய்யின் புதிய படத்தில் இணையும் விஜயகாந்த்? அது எப்படி குமாரு?

Social Media Bar

தமிழ் திரையுலகினராலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். சமீபத்தில் இவரின் மறைவு தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.

விஜயகாந்த் ஒரு கொடை வள்ளலாகவே மக்களின் மத்தியில் வலம் வந்தார். பசி என்று யார் வந்தாலும் அவர்களின் வயிற்றையும் மனதையும் நிரப்பி வழியனுப்பி வைப்பவர் விஜயகாந்த். அது மட்டுமல்லாது சினிமாத் துறையில் பலரது வளர்ச்சிக்கும் அவர் உறுதுணையாக நின்றிருக்கிறார்.

அவர்களில் ஒருவர்தான் இன்று தளபதியாக உயர்ந்து நிற்கும் விஜய். விஜய் அறிமுகமான காலகட்டத்தில் அவரது திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. ஆதலால் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சி, விஜயகாந்தின் உதவியை நாடினார்.

“என் பையனுக்காக நீ ஒரு உதவி பண்ணனும் விஜி” என்று எஸ்.ஏ,சி கேட்ட மறுநிமிடமே விஜயகாந்த் எஸ்.ஏ.சியின் வீட்டில் இருந்தார். ஏஸ்.ஏ.சி விஜயகாந்தை வைத்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஆதலால் எஸ்.ஏ.சியின் மேல் விஜயகாந்திற்கு அளவுக்கடந்த மரியாதை உண்டு. அந்த மரியாதை நிமித்தமாக விஜயகாந்த் விஜய்யுடன் இணைந்து நடித்த திரைப்படம்தான் ‘செந்தூரப்பாண்டி”. விஜய்யின் கெரியரில் ஒரு முக்கியமான வெற்றித்திரைப்படமாக “செந்தூரப்பாண்டி” அமைந்தது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கிக்கொண்டிருக்கும் “G.O.A.T” திரைப்படத்தை குறித்து ஒரு ஆச்சரியமான செய்தி வெளிவந்திருக்கிறது. அதாவது “G.O.A.T” திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளாராம்.

சமீப காலமாக AI தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் கூட “லால் சலாம்” திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் குரல்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் மீட்டுக்கொண்டு வந்து பாட வைத்தார்.

அந்த வகையில் “G.O.A.T” திரைப்படத்திலும் விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தின் மூலம் உயிர்கொடுத்து நடிக்க வைக்கப் போகிறார்களாம். இதற்கான கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாம். விஜயகாந்தின் குடும்பத்தினரிடமும் படக்குழுவினர் உரிய அனுமதியை பெற்றுவிட்டார்களாம். இவ்வாறு ஒரு ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் “G.O.A.T” திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top