அஜித் விஜய்யே நண்பர்களான மாதிரி இருக்கு!..  வரவேற்பை பெறும் காட்ஸில்லா எக்ஸ் காங்க் ஒரு புதிய சாம்ராஜ்யம் ட்ரைலர்!..

Godzilla and Kong : ஒவ்வொரு நாட்டிலும் புராதனமான ஒரு விலங்கு பற்றிய கதை இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை இந்திரனின் வாகனமான பறக்கும் வெள்ளை யானை, காமதேனு என்னும் மனித முகம் கொண்ட பசு போன்றவற்றை கூறலாம். சீனாவில் டிராகன் என்னும் மிருகம் ஒரு புராதன மிருகமாக பார்க்கப்படுகிறது.

அப்படியாக ஜப்பானை சேர்ந்த புராதன மிருகம்தான் காட்ஸில்லா. ஜப்பானில் ஏதாவது ஒரு பெரும் இயற்கை பேரழிவு ஏற்படும்போது அதை சரி செய்வதற்காக காட்ஸில்லா வருவதாக அவர்களது கதைகள் இருக்கும். பொதுவாக ஹீரோஸிமா குண்டுவெடிப்பில் நடந்த கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு உருமாறிய ராட்சத பல்லிதான் காட்ஸில்லா என்று கூறப்படுகிறது.

godzilla-x-kong1
godzilla-x-kong1
Social Media Bar

இந்த காட்ஸில்லாவிற்கு இருந்த ரசிகர்கள் காரணமாக இதை ஹாலிவுட்டும் படமாக்க துவங்கினர். 90ஸ் கிட்ஸ் கூட காட்ஸில்லா என்னும் கார்ட்டூன் தொடரை சுட்டி டிவியில் பார்த்திருப்போம். இந்நிலையில் சோனி நிறுவனம் மத்திய பூமி என்னும் கதையில் காட்ஸில்லா மற்றும் கிங்காங்கை கலந்து ஒரு கதையை உருவாக்கியது.

அதன்படி Kong: Skull Island, Godzilla King of the Monsters மற்றும் Godzilla Vs Kong என்கிற திரைப்படமும் வந்தது. அஜித் விஜய் ரசிகர்கள் போல இந்த காட்ஸில்லா வெர்சஸ் காங்கில் இரண்டும் சண்டை போட்டு கொண்டாலும் இறுதியில் மெக்கா காட்ஸில்லா என்கிற செயற்கை மிருகமொன்று வரும்போது இரண்டும் ஒன்றிணைந்து அதை காலி செய்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் இதன் நான்காம் பாகமான Godzilla x Kong: The New Empire என்கிற திரைப்படம் அடுத்து வருகிற 2024 ஆம் ஆண்டு வரவிருக்கிறது. இதன் கதைப்படி கிங்காங்க் குரங்கு வகையறாவில் கெட்ட குணம் கொண்ட புது குரங்கு ஒன்று வருகிறது. அது காங்கை விடவும் பலசாலியாக இருக்கிறது.

godzilla-kong
godzilla-kong

எனவே அதை தனியாக அழிக்க முடியாத காங் உதவிக்கு காட்ஸில்லாவை அழைக்க அதுவரை உறங்கி கொண்டிருந்த நமது கிங் ஆஃப் மான்ஸ்டர் விஸ்வரூபம் எடுக்கிறது. இவை இரண்டும் இணைந்து அந்த எதிரி ஹேர் கலர் செய்த குரங்கை என்ன செய்யப்போகின்றன என்பதே கதையாக உள்ளது.

இதன் தமிழ் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.