Tamil Cinema News
குட் நைட் இயக்குனருக்கு சம்பவம் செய்த சிவகார்த்திகேயன்.. இப்படி ஆகிடுச்சே..!
குட் நைட் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் எளிமையான கதை அம்சத்தை கொண்டு இவர் இயக்கிய குட்நைட் திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து மிக முக்கியமான இயக்குனராக மாறியிருக்கிறார் விநாயக் சந்திரசேகரன். போன வருடம் மே மாதம் குட்நைட் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்திற்கு பிறகு நிறைய தமிழ் பிரபலங்கள் விநாயக் சந்திரசேகரனிடம் வாய்ப்புகள் கேட்டு வந்து நின்றனர்.
அப்படியாக வந்த நடிகர்களில் சிவகார்த்திகேயன் முக்கியமான நடிகர் ஆவார். நடிகர் சிவகார்த்திகேயன் பெரிய நடிகர் என்பதால் அவருடன் படம் செய்வது அதிக வரவேற்பை பெற்றுத்தரும் என்பதால் இயக்குனரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வேறு ஒரு கதை பிடித்து விடவே தற்சமயம் விநாயக் சந்திரசேகரனின் திரைப்படத்தை நிறுத்தி வைத்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனை நம்பியும் மற்ற ஹீரோக்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சிவகார்த்திகேயனிடம் கமிட்டாகி உள்ளார் விநாயக் சந்திரசேகரன். இந்த நிலையில் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் அவர் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
