News
நயன்தாரா படம் பார்க்க வந்ததற்கு என்னை கேவலப்படுத்திட்டாங்க – ஜிபி முத்து வேதனை
தமிழ் மக்களிடையே எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்களில் ஜிபி முத்துவும் ஒருவர். ஒரு சாதரண மனிதருக்கு இவ்வளவு பேர் ரசிகர்களாக இருப்பது இதுவே முதல் முறை.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு பல படங்களுக்கு ப்ரோமோஷன் செய்வதற்கு ஜி.பி முத்துவை நாடி வருகின்றனர். தற்சமயம் லவ் டுடே மாதிரியான சில படங்களுக்கு ஜிபி முத்து ப்ரோமோஷன் செய்து வந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியானது. படத்தின் வெளியீடு நிகழ்ச்சி டி நகரில் உள்ள ஒரு திரையரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஜிபி முத்துவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நிகழ்வுக்கு வந்த ஜிபி முத்து பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு சென்றுவிட்டார். இதுக்குறித்து ஜிபி முத்து கூறும்போது “நயன்தாராவுடன் அமர்ந்து படம் பார்க்க வாருங்கள், என்றுதான் அழைத்தார்கள். ஆனால் என்னை எங்கோ ஒரு மூலையில் அமர வைத்தனர். மேலும் அங்குள்ளவர்கள் என்னிடம் மிகவும் தர குறைவாக நடந்து கொண்டனர்.” என ஜிபி முத்து கூறியுள்ளார்.
இதனால் ஜிபி முத்துவின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
