அடுத்தடுத்து வரவிருக்கும் லோகேஷ் படங்கள் ? – லீக் செய்த ப்ரித்திவிராஜ்!

நடிகர் ப்ரித்திவிராஜ் தற்சமயம் தமிழ் சினிமாவை விடவும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவராக இருக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி, படங்கள் தயாரிப்பது, இயக்குவது என அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார் ப்ரித்திவிராஜ்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் வில்லனாக ப்ரித்திவிராஜ் நடிக்க இருந்தது. ஆனால் தற்சமயம் அவருக்கு பதில் விஷால் அல்லது அர்ஜூனை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுக்குறித்து ப்ரித்திவிராஜ் கூறும்போது ”லோகேஷ் கனகராஜின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். தளபதி 67 படத்தின் கதையும் எனக்கு தெரியும். கைதி 2 படத்தின் கதையையும் கேள்விப்பட்டேன். அதுமட்டுமின்றி லாரன்ஸ், நயன்தாரா வை வைத்தும் கூட லோகேஷ் ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார்” என ப்ரித்திவி கூறினார்.

ஏற்கனவே கைதி 2 படத்தில் லாரன்ஸ் வில்லனாக வருவதாக ஒரு பேச்சு இருந்து வந்தது. இந்த நிலையில் லாரன்ஸ் நயன்தாரா படமானது அந்த கதாபாத்திரத்திற்கான தனி கதையாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்து வருகிறது.

Refresh