இத்தனை வருசம் போலீசே செய்யாத விஷயத்தை செய்த அஜித் பட இயக்குனர்.. காவல் துறை அதிகாரி சொன்ன தகவல்.!
தமிழ் திரைப்பட இயக்குனர்களில் ஒரு சில இயக்குனர்கள்தான் படத்தின் கதைக்காக அதிகமாக ஆராய்ச்சி வேலைகளை செய்வது உண்டு. அப்படி தொடர்ந்து தனது திரைப்படங்களில் சமூகம் சார்ந்த முக்கியமான விஷயங்களை பேசக்கூடியவர் இயக்குனர் ஹெச்.வினோத்.
ஹெச்.வினோத் ஆரம்பத்தில் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்களில் அவர் பல முக்கிய விஷயங்களை பேசி இருப்பதை பார்க்க முடியும். அதனை தொடர்ந்துதான் பிறகு அவருக்கு அஜித் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஹெச்.வினோத் வைத்த ஒரு காட்சி குறித்து கைரேகை நிபுணர் ஒருவர் கூறியிருக்கும் விஷயம் அதிக வைரல் ஆகி வருகிறது.

ஹெச்.வினோத் வைத்த காட்சி:
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஒரு காட்சியில் கார்த்தி இடம் கத்தியை எப்படி எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி கேட்பதாக காட்சி இருக்கும். அதில் கைகுட்டையை வைத்து எடுக்காமல் கத்தியை கைகளால் எப்படி எடுக்க வேண்டும் என்று கார்த்தி விளக்கம் கொடுத்திருப்பார்.
இது குறித்து கைரேகை நிபுணர் கூறும் பொழுது உண்மையிலேயே இப்பொழுது வரை காவலர்கள் கத்திகளை எடுக்கும் பொழுது அதில் கர்சிப்பை போட்டு தான் எடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எடுக்கக் கூடாது எனக்கு தெரிந்து அதை முதன் முதலில் இவ்வளவு விவரமாக காண்பித்தவர் இயக்குனர் ஹெச் வினோத் தான் என்று கூறியிருக்கிறார்.