Connect with us

சச்சுவை உள்ள விட்டு கதவை சாத்துங்க!.. பயம் காட்டிய ஜெயலலிதா!.. ஆடிப்போன சச்சு!.

jayalalitha sachu

Cinema History

சச்சுவை உள்ள விட்டு கதவை சாத்துங்க!.. பயம் காட்டிய ஜெயலலிதா!.. ஆடிப்போன சச்சு!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பெரும் நடிகையாக இருந்து அதன் பிறகு அரசியலில் மிகப்பெரிய போராட்டங்களை எல்லாம் கண்டு தனி ஒரு பெண்ணாக ஒரு கட்சியை தன் கைக்குள் கொண்டு வந்தவர் நடிகை ஜெயலலிதா.

இவருக்கு சினிமாவில் எக்கச்சக்கமான நண்பர்கள் இருந்தனர். எவருடனும் எளிதாக பழகக் கூடியவர் நடிகை ஜெயலலிதா .அப்படி இருக்கும் நண்பர்களில் முக்கியமானவர் நடிகை சச்சு. சச்சு குமாரி இத்தனைக்கும் சினிமாவில் நகைச்சுவை நடிகையாகதான் நடித்து வந்தார்.

இருந்தாலும் ஜெயலலிதாவுடன் நல்ல நட்பில் இருந்தார். ஜெயலலிதா முதலமைச்சரான பொழுது சச்சு அவருடைய சகோதரியை அழைத்துக் கொண்டு ஜெயலலிதாவை பார்க்கச் சென்றார். அப்பொழுது வெளியில் இருந்தவர்கள் சச்சுவையை மட்டும்தான் உள்ளே விடுவோம்.

அவரது சகோதரியை விடமாட்டோம் என்று கூறிவிட்டனர். இதை பார்த்த ஜெயலலிதா இருவரையும் விடுங்கள் என்று உள்ளிருந்து சத்தம் போட்டு உள்ளார். அதன் பிறகு சச்சுவும் அவரது சகோதரியும் உள்ளே சென்ற பின் எல்லோரும் வெளியே சென்று கதவை சாத்துங்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதனை கேட்டு சச்சு பயந்துள்ளார். அதன்படியே அனைவரும் சென்று கதவையும் சாத்தியுள்ளனர் .வேகமாக சச்சுவிடம் வந்த ஜெயலலிதா அவரை கட்டி அணைத்துள்ளார். என்னதான் முதலமைச்சராக இருந்தாலும் அவர் தன்னுடைய பழைய தோழி என்பதால் அவரிடம் பாசம் காட்டினார் ஜெயலலிதா. இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் சச்சு.

To Top