Tamil Cinema News
வீர தீர சூரன் தடை நீக்கம் படம் எப்போ ரிலீஸ்..!
சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படம் ஒரு முழு ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாகும். தமிழ்நாடு முழுக்கவே இந்த படத்தின் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது.
இந்த படத்தில் விக்ரம், எஸ்.ஜே சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிதி வழங்கிய பிரச்சனையில் பி.4.யு என்கிற நிறுவனம் படத்தின் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.
அதனை தொடர்ந்து இன்று காலை 9 மணி காட்சிகள் ஏற்கனவே நீக்கப்பட்டு இருந்தன. மேலும் 4 வாரங்களுக்கு இந்த படத்தை வெளியிட கூடாது எனவும் அறிவித்திருந்தது டெல்லி உயர்நீதி மன்றம்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் பி.4.யு நிறுவனமும் தற்சமயம் சுமூகமான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து படத்திற்கு விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றம். ஆனால் வீர தீர சூரன் வெளியாக இருந்த திரையரங்குகளில் எல்லாம் பெரும்பாலும் இன்று வெளியான எம்புரான் திரைப்படம் மாற்றப்பட்டுள்ளது.
எனவே மாலை காட்சிகளில் இருந்து வீர தீர சூரனுக்கு திரையரங்குகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது,
