News
ஹிப் ஹாப் ஆதியால் கடுப்பான பொதுஜனம்!.. மன்னிப்பு கேட்ட ஆதி..!
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்களை யூ ட்யூப்பில் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர் ஆதி. பிறகு அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற்றார்.
முதன் முதலில் நடிகர் சுந்தர் சிதான் இவருக்கு தமிழில் இசையமைப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் சில பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து கதாநாயகனாகவும் அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதி.
2017 இல் மீசைய முறுக்கு என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதி. இந்த திரைப்படத்தையும் சுந்தர் சிதான் தயாரித்தார். இந்த படமும் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி.

தற்சமயம் இவர் பி.டி சார் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டுள்ளன. இந்த நிலையில் யூ ட்யூப் இண்டர்வீவ்க்காக ஒரு பொது இடத்திற்கு சென்ற ஹிப் ஹாப் ஆதி அங்கு சிறுவர்களுடன் ராட்டினம் சுற்றியுள்ளார்.
அப்போது ராட்டினம் சுற்றும்போதே அவரை பேட்டி எடுத்துள்ளனர். இதனால் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் வெயிலில் வெகுநேரம் காத்திருந்துள்ளனர். பிறகு கடுப்பான ஒரு நபர் எப்பய்யா அவரை இறக்கி விடுவீங்க எவ்வளவு நேரம் வெயிலில் நிற்பது என கேட்டுள்ளார்.
அதற்கு ஹிப் ஹாப் ஆதி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தம்பி நீங்க பெரிய ஸ்டார்தான் ஆனால் நாங்க எவ்வளவு நேரம் வெயிலில் நிற்பது என கேட்டுள்ளார். பிறகு இறங்கி வந்த ஹிப்ஹாப் ஆதி அவரிடம் மன்னிப்பு கேட்டு பேசிவிட்டு வந்துள்ளார்.
