மோடி ஆதரவாளருடன் நடிக்க மாட்டேன்!.. படத்தில் இருந்து தூக்கிய சித்தார்த்.. பதிலுக்கு வன்மம் தீர்த்த எஸ்.வி சேகர்!..
தமிழ் திரையுலகில் பல காலங்களாக நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.வி சேகர். காமெடி கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நாடகங்களில் நிறைய சாதனைகளை செய்தவர் எஸ்.வி சேகர்..
தற்சமயம் வயதான காரணத்தால் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் சமீபத்தில் சித்தார்த் நடிக்கும் டெஸ்ட் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சித்தார்த். இந்த திரைப்படத்தில் இவர் சித்தார்த்தின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டி இருந்தது.
ஆனால் எஸ்.வி சேகருடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் சித்தார்த். ஏனெனில் பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலையை கொண்டவர் சித்தார்த். ஆனால் எஸ்.வி சேகர் மோடியின் ஆதரவாளர் என்கிற காரணத்தால் அவருடன் நடிக்க முடியாது என தெரிவித்துவிட்டார் சித்தார்த்.
இதனால் கோபமடைந்த எஸ்.வி சேகர் ஒரு விழாவில் பேசும்போது அந்த டெஸ்ட் படத்தின் கதையை மொத்தமாக கூறி சித்தார்த்தை பழி வாங்கிவிட்டார். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் சித்தார்த்தின் பையனை ஒரு கும்பல் கடத்திவிடுகிறது.
அந்த கும்பல் சொல்வது போல சித்தார்த் விளையாடினால்தான் அந்த பையனை உயிருடன் விடுவதாக கூறுகிறது. இதை வைத்து படத்தின் கதை செல்கிறது என கூறியுள்ளார் எஸ்.வி சேகர். மேலும் அவரை நிராகரித்த படங்கள் ஒன்று ஓடாமல் போகும் அல்லது ரிலீஸே ஆகாது கூறியுள்ளார் எஸ்.வி சேகர்…