அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் இளையராஜா பயோபிக் – இடையே தனுஷ் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதன் டைட்டில் போஸ்டர் சமீபத்தில்  வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இசைஞானியின் பயோபிக்கில் நடிப்பதற்காக தனுஷ் கேட்ட சம்பளம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் தன் 51 ஆவது திரைப்படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் தனுஷ். இதற்கிடையே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். 

இப்படி பல படங்களில் கமிட் ஆகிருக்கும் தனுஷ் அடுத்ததாக இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனரான பால்கி தான் இயக்குவார் என தகவல்கள் வந்த நிலையில்,  தற்போது இப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்க இருகிறார்.

Social Media Bar

இந்த நிலையில்,  இப்படத்தில்  நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம் கோலிவுட் வட்டாரத்தையே ஷாக்காக்கி இருக்கிறது. இளையராஜாவின்  தீவிர ரசிகரான தனுஷ் அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக ஐம்பது கோடி சம்பளம் கேட்டுள்ளார். 

தனுஷ் கேட்ட சம்பளத்தையே  கொடுப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த இளையராஜா அதை மறுத்த நிலையில், தற்போது பிரபல நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. அதனால் இளையராஜா பயோபிக் பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பலாம்.