Cinema History
மக்களை மதிக்கமாட்டார் இளையராஜா… எம்.ஜி.ஆர் அப்படி கிடையாது!.. சினிமா பிரபலம் சொன்ன தகவல்…
திரை இசை கலைஞர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படமே இளையராஜாவிற்கு பெரும் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் அதற்கு முன்பு வேறு எந்த இசையமைப்பாளர்களும் பெறாத உச்சத்தை தொட்டார் இளையராஜா. பெரும் இசையமைப்பாளராக ஆன பிறகு தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் வர துவங்கின. அப்போது இளையராஜாவின் இசைக்காகவே மக்கள் திரையரங்கிற்கு படத்தை பார்க்க வந்தனர் என ஒரு பேச்சு உண்டு.
இதனால் அதிகமான இயக்குனர்களை காக்க வைத்தார் இளையராஜா. அவரது ஸ்டுடியோவிற்கு வெளியே எப்போது இளையராஜா அழைப்பார் என இயக்குனர்கள் எல்லாம் காத்துக்கொண்டிருப்பார்களாம். இளையராஜா சில தினங்களுக்கு முன்பு மனோபாலா இறந்தபோது நான் காரில் செல்லும்போது பாலத்தில் என்னை பார்க்க காத்துக்கொண்டிருந்த இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர் என கூறியிருந்தார்.
இந்த பேச்சு மிகவும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதுக்குறித்து தயாரிப்பாளர் ராஜன் கூறும்போது “அந்த காலத்தில் கோடம்பாக்கம் ரயில்வே ரோட்டில் இதே போல எம்.ஜி.ஆருக்காக ஒரு கூட்டம் காத்து கொண்டிருக்கும். அப்போது கோடம்பாக்கம் ரயில்வே க்ராஷிங்கிற்கு வந்ததும் எம்.ஜி.ஆர் இறங்கி அனைவருக்கும் கை காட்டிவிட்டு செல்வார். ஏனெனில் எம்.ஜி.ஆர் மக்களை மதித்தார்.
ஆனால் அப்படி ஒரு மரியாதை கூட தெரியாதவர்தான் இளையராஜா. அது மட்டுமின்றி மனோபாலா இளையராஜாவுக்காக அப்படி காத்துக்கொண்டிருக்கும் ஆள் எல்லாம் கிடையாது. என கூறியிருந்தார் ராஜன்.
