Cinema History
என்ன பாட சொல்லி குடும்பமே ஏமாத்திட்டாய்ங்க!.. என்னென்ன பாட்டு தெரியுமா?. லிஸ்ட் போட்ட வெங்கட் பிரபு!..
Venkat Prabhu : தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரு துறையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் குடும்பம் என்றால் அது இளையராஜாவின் குடும்பம்தான் இளையராஜாவின் குடும்பத்தில் எல்லோருமே இசையின் மீது வரம் பெற்றவர்கள் என்று கூறலாம்.
இளையராஜாவை தொடர்ந்து அவரது தம்பி கங்கை அமரனும் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு இளையராஜாவின் மகனான கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜா கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி ஆகிய பலரும் தமிழ் சினிமாவில் இசையமைத்திருக்கின்றனர்.

இதில் இசையமைக்காமல் இயக்குனரான ஒருவர்தான் வெங்கட் பிரபு ஏனெனில் கங்கை அமரன் இயக்குனர் என்றாலும் அவரும் இசையமைப்பாளராக இருந்துள்ளார். ஆனால் வெங்கட் பிரபுவுக்கு சிறப்பாக பாடல் பாடும் திறன் இருந்ததை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதாவது ஒரு பாடலுக்கு இசையமைக்கும் பொழுது அதை வெங்கட் பிரபு வைத்து பாடச் சொல்லி அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்களாம் அதற்குப் பிறகு அது படமாக வரும் பொழுது வேறு ஒரு ஆளை பாட வைத்து படத்தில் வைத்து விடுவார்களாம்.
காதலா காதலா திரைப்படத்தில் வரும் காசு மேலே காசு வந்து என்கிற பாடலையும் கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா என்கிற பாடல் வரியையும் மற்றும் பல பாடல்களையும் வெங்கட் பிரபு முழுமையாக பாடி இருக்கிறாராம்.
அதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்னை என் வீட்டில் இருப்பவர்கள் பாடச் சொல்லி குடும்பமே கேட்கும் ஆனால் கடைசியில் என்னை ஏமாற்றிவிட்டு அதில் வேறு ஒரு ஆளை பாட வைத்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.
