இளையராஜாவோட முதல் படம் அன்னக்கிளி கிடையாது… அது ஒரு சிவாஜி கணேசன் படம்!.. என்னப்பா சொல்றீங்க!.
Music Director Ilayaraja: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. கிராமத்தில் இருந்து கனவுகளோடு சினிமாவிற்கு வந்த இளைஞர்களில் இளையராஜாவும் ஒருவர்.
இளையராஜாவிற்கு சினிமாவிற்கு வந்த உடனே இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கி கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் பாடல்கள் பாடி காசு சம்பாதித்து அதில் வாழ்ந்து வந்தார் இளையராஜா.
அப்படியான ஒரு கடினமான நிலையில் வாய்ப்பு தேடிதான் இப்படி ஒரு உயரத்தை தொட்டு இருக்கிறார் இளையராஜா. முதன்முதலாக இவர் இசையமைத்த திரைப்படம் அன்னக்கிளி என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். ஆனால் உண்மையில் அவர் முதன்முதலாக இசையமைத்த திரைப்படம் அன்னக்கிளி கிடையாது.

அன்னக்கிளிக்கு முன்பாகவே சிவாஜிகணேசன் நடித்த தீபம் என்கிற திரைப்படத்தில் இளையராஜாவிற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில்தான் முதன்முதலாக தனது இசையை வெளிப்படுத்தினார் இளையராஜா.
ஆனால் தீபம் படத்தில் தயாரிப்பு தொடர்பாக சில பிரச்சனைகள் இருந்ததன் காரணமாக அந்த திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் அடுத்து அவருக்கு அன்னக்கிளி திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.
அன்னக்கிளிக்கும் இளையராஜாதான் இசையமைத்தார். அன்னக்கிளி திரைப்படத்திற்கும் தீபம் திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இரண்டு திரைப்படத்திலுமே கதாநாயகியாக சுஜாதா தான் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தீபம் திரைப்படத்திற்கு முன்னதாகவே அன்னக்கிளி திரைப்படம் வெளியாகிவிட்டது. அதனால் இளையராஜா முதன்முதலாக இசையமைத்த திரைப்படம் என்கிற பெருமையை அன்னக்கிளி திரைப்படம் பெற்றது.
அன்னக்கிளி வெளியாகிய ஒரு வருடம் கழித்துதான் தீபம் திரைப்படம் வெளியானது. முன்னரே வெளியாகியிருந்தால் தீபம் திரைப்படம்தான் இளையராஜாவின் முதல் திரைப்படமாக கூறப்பட்டிருக்கும். ஆனால் இசையமைத்த வகையில் பார்க்கும் பொழுது தீபம்தான் இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம் ஆகும்.