Cinema History
எஸ்.பி.பி பாட்டுல அந்த ஒரு பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஓப்பனாக கூறிய இளையராஜா!..
தமிழில் உள்ள இசையமைப்பாளர்களில் பல வருடங்களாக சினிமாவில் இருந்து மக்கள் மத்தியில் மாறாத இடம் பிடித்தவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இளையராஜா.
கிராமத்தில் இருந்து கனவுகளோடு திரைத்துறைக்கு வந்த இளையராஜாவிற்கு தமிழில் வாய்ப்பு வழங்கியவர் பஞ்சு அருணாச்சலம். அதற்கு பிறகு தமிழில் எக்கச்சக்கமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் இளையராஜா.
இளையராஜாவின் பாடல்கள் ஹிட் அடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எஸ்.பி.பி, இளையராஜா கூட்டணியில் வரும் பாடல்கள் எல்லாம் இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.

எஸ்.பி.பி இவ்வளவு ஹிட் பாடல்களை கொடுத்தபோதிலும், இளையராஜா என்றுமே அவரது பாடல்களை புகழ்ந்து பேசியதே கிடையாதாம். இந்த நிலையில் ஒரு தெலுங்கு பாடலுக்கான இசையை அமைத்தப்போது அதற்கான பாடலை பாடுவது மிக கடினம் என்கிற நிலை இருந்துள்ளது.
எனவே எஸ்.பி.பியை அழைத்து அந்த பாடலை பாடுமாறு கேட்டுள்ளார் இளையராஜா. ஆனால் எஸ்.பி.பி மிக எளிதாக அந்த பாடலை பாடியிருக்கிறார். அந்த ஒரு பாட்டுக்கு மட்டும்தான் இளையராஜா எஸ்.பி.பியை பாராட்டி உள்ளார். ஆனால் அந்த பாடல் இறுதி வரை வெளி வரவே இல்லையாம்!.
