என் கதையை என் இஷ்டத்துக்குதான் படமாக்கணும்!.. தனுஷிற்கு ரூல்ஸ் போட்ட இளையராஜா!..

Dhanush and Ilayaraja: தமிழ் சினிமாவில் வெகுவாக மக்களால் அறியப்பட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இப்போது உள்ள நடிகர்கள் கூட அவரது இசையமைப்பில் ஒரு பாடலாவது தங்களது திரைப்படங்களில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அந்த அளவிற்கு பிரபலமானவர் இசையமைப்பாளர் இளையராஜா.

சாதரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டவர் இசைஞானி. இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கலாம் என முடிவு செய்தார் தனுஷ். இதற்காக இளையராஜாவிடம் அனுமதி பெற்ற தனுஷ் ஹிந்தியில் பிரபல இயக்குனரான் பால்கியிடம் இதை படமாக்குவது குறித்து பேசியுள்ளார்.

இளையராஜா எடுத்த முடிவு:

ilayaraja-1
ilayaraja-1
Social Media Bar

இந்த நிலையில் தனுஷ் படத்தை தயாரிப்பதில் ஏனோ திடீரென இளையராஜாவிற்கு உடன்பாடு இல்லாமல் போய்விட்டது. எனவே நானே எனது சுய சரிதைக்கு தயாரிப்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என கூறிவிட்டாராம் இளையராஜா.

மேலும் படத்திற்கான இயக்குனரையும் நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார் இளையராஜா. எனவே தனுஷ் இந்த விவகாரத்தில் இருந்து விலகி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னுடைய கதையை படமாக்குவதற்கு இயக்குனர் மாரி செல்வராஜிடம் இளையராஜா பேசி வருவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே மாரி செல்வராஜ் சாதி ரீதியாக சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை தனது திரைப்படங்களில் காட்ட கூடியவர்.

ilayaraja-2
ilayaraja-2

அப்படி இருக்கும்போது கண்டிப்பாக இளையராஜாவிற்கும் அது மாதிரியான பிரச்சனைகள் இருந்திருக்கும். சினிமாவிலேயே அவர் அப்படியான பிரச்சனைகளை சந்தித்திருப்பார். அவற்றையெல்லாம் கட்டம் கட்டி படமாக்குவார் மாரி செல்வராஜ் என எதிர்பார்க்கப்படுகிறது.