Tamil Cinema News
இத்தனை நாள் தெரியவே இல்லை..! ஏ.ஆர் ரகுமானின் ரகசியத்தை உடைத்த இளையராஜா.!
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு பிறகு அதிக பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். முதல் திரைப்படத்திலேயே பெரும்பாலான ரசிகர்களை பிடித்தார் ஏ.ஆர் ரகுமான்.
இதனால் ஏ.ஆர் ரகுமானுக்கு எடுத்த உடனேயே அதிக பிரபலம் கிடைத்தது. அதுவரை இளையராஜாதான் தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அதற்கு பிறகு இளைஞர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராக மாறினார் ஏ.ஆர் ரகுமான்.
ஆனாலும் இளையராஜாவின் இசைக்கு இப்போதும் ரசிகர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ரோஜா திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் இருந்தே இளையராஜாவுக்கு போட்டி இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் தான் பார்க்கப்படுகிறார்.
ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக மாறுவதற்கு முன்பு இளையராஜாவிடம்தான் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். இந்த நிலையில் ஒருமுறை இளையராஜா ஏ.ஆர் ரகுமான் இருவருமே ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
அந்த சமயத்தில் பேசிய இளையராஜா கூறும்போது ஏ.ஆர் ரகுமான் என்னுடன் இணைந்து 500க்கும் அதிகமான படங்களில் வேலை பார்த்திருக்கிறார். என கூறினார். மேலும் ஏ.ஆர் ரகுமானிடம் திரும்பி இதையெல்லாம் நீ சொல்லணும் மக்கள்கிட்ட என கூறியிருந்தார்.
ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இளையராஜாவின் திரைப்படங்களில் 500க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் பணிப்புரிந்து இருப்பார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.
