Latest News
வழக்கில் சிக்கிய இளையராஜா.. பாடல் நிறுவனம் வைத்த ஆப்பு!..
தன்னுடைய பாடல்களை பயன்படுத்துபவர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சென்று கொண்டிருக்கின்றன.
ஒரு பாடல் என்பது இசையமைப்பாளருக்கு சொந்தமானதா அல்லது தயாரிப்பாளருக்கு சொந்தமானதா என்கிற பேச்சு பல வருடங்களாக சினிமாவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தனது பாடல்களுக்கான உரிமம் தனக்குதான் வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார் இளையராஜா. ஆனால் ஒரு பாடல் எனும் பொழுது அதில் இசையமைப்பாளருக்கு மட்டுமே பங்கு இருப்பதில்லை.
பாடல் குறித்த பிரச்சனை:
பாடல் ஆசிரியர் பாடகர்கள் என்று பலருமே அதில் பணிபுரிந்து இருக்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது இசையமைப்பாளர் மட்டுமே எப்படி ஒரு பாடலுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகிறது.
இதற்கு நடுவே நிறைய திரைப்படங்களில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக தொடர்ந்து அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார் இளையராஜா.
சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் குறித்து கூட இந்த பிரச்சனை தொடர்ந்தது. தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராக இருக்கும் கூலி திரைப்படத்தில் டிஸ்கோ என்னும் பாடலை பயன்படுத்தியதற்காகவும் இதே போல பிரச்சனை செய்திருந்தார் இளையராஜா.
வழக்கு:
இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ நிறுவனம் தனக்கு உரிமம் இருப்பதாக கூறியிருந்தது. இந்த நிலையில் எக்கோ நிறுவனத்தின் தலைமை உறுப்பினராக இளையராஜாதான் இருந்தார் என்றும் அவரது பினாமி பெயரில்தான் அந்த நிறுவனம் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
எனவே அந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட பாடல்கள் எல்லாம் தனக்குதான் சொந்தம் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த பாடல்களின் உரிமம் எல்லாம் தனக்குதான் சொந்தம் என்று எக்கோ நிறுவனம் ஒரு பக்கம் வழக்கில் பேசி வருகிறது.
இதனை அடுத்து இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது இந்த வழக்கில் எக்கோ நிறுவனத்திற்குதான் சாதகமாக நிறைய விஷயங்கள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்