Latest News
அவர்களை நம்ப பயமாக இருக்கிறது.. அனிமல் படம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா!.
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிகவும் முக்கியமானவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலமாக வரவேற்பை பெற்றார் ராஷ்மிகா.
அதற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று வந்தார். தமிழிலும் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கிய உடனே அவருக்கு தமிழ் சினிமாவின் மீது தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் எடுத்த உடனே தமிழ் சினிமாவில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே நடித்தார்.
பாலிவுட்டில் எண்ட்ரி:
இந்த நிலையில் தற்சமயம் புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமா மீது ஆர்வம் காட்டி வருகிறார் ராஷ்மிகா. அந்த வகையில் பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபருடன் சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படத்தில் அதிக முத்தக் காட்சிகள் இருந்தது கூட சர்ச்சைக்கு உள்ளான ஒரு விஷயமாக இருந்து வந்தது.
ரசிகருக்கு பதில்:
இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருபவர் ராஷ்மிகா. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் அனிமல் திரைப்படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்து ”ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா அதில் ஒரு சின்ன திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவதுதான் பயமாக இருக்கிறது ஆனால் எல்லா மனிதர்களும் அப்படி இல்லை மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று பதில் அளித்திருக்கிறார்.