Latest News
அனிரூத்திற்கு பிக்பாஸ் பிரபலம் வைத்த இரவு விருந்து.. ட்ரெண்டாகும் போட்டோஸ்..
இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்திரன். சிறு பிள்ளையாக இருக்கும் பொழுதே அவருக்கு இசையின் மீது அதிகமான ஆர்வம் இருந்த காரணத்தினால் தொடர்ந்து இசை தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வந்தார்.
இதனை தொடர்ந்து அனிருத்திற்கு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக தனுஷ் நடித்த தெறி திரைப்படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
அனிருத் சினிமாவிற்கு வந்தது முதலே அவர் குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார் அனிருத் ரவிச்சந்திரன்.
அனிரூத் காதல் விவகாரம்:
இது தொடர்பாக நிறைய புகைப்படங்கள் கூட அப்பொழுது வெளியாகி ட்ரண்டாகி வந்தன. இருந்தாலும் கூட அவையெல்லாம் அனிருத்தின் மார்க்கெட்டை பெரிதாக பாதிக்கவில்லை.
தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, கத்தி, மாரி, நானும் ரவுடிதான் என்று அவர் இசையமைத்த அனைத்து படங்களுமே ஹிட் படங்களாக அமைந்தன. தற்சமயம் வெளியாகும் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களுக்கு முக்கால்வாசிக்கு அனிருத்தான் இசையமைத்து வருகிறார்.
பயில்வான் ரங்கநாதன் பேச்சு:
இந்த நிலையில் அனிருத் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு செய்தியை பகிர்ந்து இருந்தார். பிக் பாஸ் போட்டியாளரான ஐக்கி பெரி என்னும் பாடகியுடன் தற்சமயம் பார்ட்டி செய்து இருக்கிறார் அனிருத்.
இரவு விருந்தில் இருவரும் கலந்து கொண்டதுடன் மிகவும் நெருக்கமாக ஆட்டம் பாட்டம் என்று இருந்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருக்கலாம் என்று கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஐக்கி பெரி மருத்துவராக இருந்தவர் அவர் பாடல்களின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் ராப் பாடகியாகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்