Connect with us

ஆரம்பத்திலேயே கட்டையை போட்ட இளையராஜா!.. சிக்கலில் சிக்கிய ரஜினி திரைப்படம்!..

ilayaraja rajinikanth

News

ஆரம்பத்திலேயே கட்டையை போட்ட இளையராஜா!.. சிக்கலில் சிக்கிய ரஜினி திரைப்படம்!..

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களில் தொடர்ந்து வெற்றி படங்களாக திரைப்படம் கொடுக்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் முக்கியமான நடிகராவார். ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.

ஜெயிலர் படத்தில் இருந்து தொடர்ந்து நான்கு திரைப்படங்களில் போலீஸாக நடிக்கிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் வேட்டையன் திரைப்படத்திலும் போலீசாகதான் நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

ilayaraja-1
ilayaraja-1

வேட்டையன் திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்சமயம் லோகேஷ் இயக்கும் கூலி என்கிற திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அந்த டீசரில் இளையராஜாவின் பாடலான வா வா பக்கம் வா என்கிற பாடலில் வரும் டிஸ்கோ டிஸ்கோ என்கிற வரிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

அந்த வரிகளுக்காக இளையராஜாவிற்கு நன்றி தெரிவித்திருந்தாலும் இளையராஜாவிடம் பணம் கொடுத்து அந்த காப்புரிமையை வாங்கவில்லையாம் சன் பிக்சர்ஸ். இதனால் கடுப்பான இளையராஜா தற்சமயம் அந்த பாடல் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் காப்புரிமை தொகையை கொடுக்காத பட்சத்தில் உடனடியாக ட்ரைலரில் அந்த பாடலை அவர்கள் நீக்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் கூட இதுக்குறித்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

To Top