News
அந்த ஒரு கண்ணதாசன் பாட்டுதான் என் வாழ்க்கையையே மாத்துனுச்சு!.. இளையராஜா உருவாக காரணமாக இருந்த பாடல்!..
Ilayaraja and kannadasan: அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.
மற்ற இசையமைப்பாளரின் இசையை போலத்தான் இளையராஜாவின் இசையும் இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு புதுவகையான இசையை வழங்கும் திறன் இளையராஜாவிற்குதான் இருந்தது. எனவே கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அதிக காலம் இளையராஜா இசையமைத்து வந்துள்ளார்.

இப்போதும் கூட விடுதலை படத்தில் அவர் இசையமைத்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 1000க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது ஆரம்பத்தில் எப்படி முதன்முதலில் இசையின் மீது ஆர்வம் வந்தது என்பதை பகிர்ந்து இருக்கிறார்.
இசையின் மீது வந்த ஆர்வம்:
அதில் அவர் கூறும் பொழுது அவர் பள்ளி படிக்கும் காலங்களில் அவ்வளவாக பாடல்கள் எல்லாம் கேட்க மாட்டார். தொடர்ந்து படிப்பின் மீது ஆர்வம் செலுத்தி வந்தார். எப்படியாவது நிறைய படிக்க வேண்டும் என்பதுதான் அப்போது இளையராஜாவின் பெரிய ஆசையாக இருந்தது.

படித்துவிட்டு என்ன ஆகலாம் என்றெல்லாம் எந்த ஒரு ஆசையும் இருக்கவில்லை. ஆனால் நன்றாக படிக்க வேண்டும் என்பது மட்டும் பெரிய ஆசையாக இருந்திருக்கிறது. இதற்கு நடுவில் அவர் கேட்ட ஒரு கண்ணதாசனின் பாடல்தான் தன்னுடைய வாழ்வையே மாற்றி அமைத்ததாக கூறுகிறார் இளையராஜா.
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி என்று ஒரு பாடல் உண்டு. அது அப்போது உள்ள பாடலிலேயே சிறப்பான ஒரு மெலோடி பாடலாகும். அந்த பாடலை எந்த கல்யாணம், காதுகுத்து விழாவில் கேட்டாலும் அப்படியே நின்று விடுவார் இளையராஜா அப்போதுதான் முதன்முதலாக ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்கிற ஆசை தனக்கு வந்ததாக கூறுகிறார் இளையராஜா.
