News
எனக்கு இப்ப வரைக்கும் மியுசிக் போட தெரியாது..! என்கிட்ட இப்படியெல்லாம் கேக்குறாங்க..! மனம் திறந்த இளையராஜா…
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜா அளவிற்கு எந்த இசையமைப்பாளர்களும் அதிக பாடல்களுக்கு இசையமைத்திருக்க முடியாது.
அந்த அளவிற்கு இளையராஜா தன் வாழ்நாள் முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய இளையராஜா கூறும்போது, கிராமத்தில் இருந்து இங்கு கிளம்பி வரும்போது எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது. எனவே இசையை கற்றுக்கொள்ளதான் நான் இங்கு வந்தேன்.

ஆனால் இப்போது வரை நான் இசையை கற்றுக்கொள்ளவே இல்லை என்கிறார் இளையராஜா. இசையை இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். பலரும் நான் இசையமைத்த பாடல்களை கேட்டுவிட்டு என்னிடம் வந்து உங்களின் அந்த பாடலை கேட்டேன்.
சிறப்பாக இசையமைத்துள்ளீர்கள் என என்னிடம் கூறுவார்கள். எனக்கு இசை என்பது மூச்சு விடுவது போன்ற ஒரு செயலாக மாறிவிட்டது. என்னிடம் இப்படி யாராது கேட்கும்போது நீங்கள் நன்றாக மூச்சு விடுகிறீர்கள் என கூறினால் எப்படி இருக்கும்.
அப்படிதான் எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார் இளையராஜா.
