Cinema History
படத்தை ஓ.கே பண்றதுக்காக என் பேரை யூஸ் பண்ணுவார்!.. இளையராஜாகிட்டயே ட்ரிக் காமித்த வாலி..
சினிமாவில் இசையின் அரசன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. தமிழில் அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் இளையராஜா.
இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அதன் பிறகு இளையராஜாவின் இசைக்காகவே திரைப்படங்கள் ஓட துவங்கின. இதனால் இயக்குனர்களே இளையராஜாவின் ஸ்டுடியோ வாசலில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.
அப்போதைய சமயத்தில் கண்ணதாசனுக்கு பிறகு பாடல் வரிகள் எழுதுவதில் சிறந்தவராக கவிஞர் வாலி இருந்தார். இளையராஜாவின் பல பாடல்களுக்கு வாலிதான் இசையமைத்து கொடுத்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு அப்போது இசையமைத்து வந்தார் இளையராஜா.
அந்த பாடல்களுக்கு பாடல் வரிகளை வாலி எழுதி வந்தார். இப்படி இருக்கும்போது அதில் ஒரு பாடலுக்கு மட்டும் வாலியால் வார்த்தைகளே எழுத முடியவில்லை. திரும்ப திரும்ப பாடல் வரிகளை கேட்ட வாலி ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல என பாடல் வரிகளை எழுதினார்.
இதுக்குறித்து இளையராஜா கூறும்போது சில சமயம் வாலி நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என என் பெயரை சேர்ப்பதுண்டு. எனவே இந்த பாடலில் ராஜா என்கிற பெயர் வேண்டாம் என கூறினேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் பெயரே ராஜாதான் என்பதை வாலி பிறகுதான் கூறினார் என தனது பேட்டியில் இளையராஜா கூறினார்.
