Tamil Cinema News
என் உடையை பத்தி ஏன் கேக்குறீங்க..! பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான தொகுப்பாளினி..!
முன்பெல்லாம் தமிழ் சினிமா பிரபலங்கள்தான் சர்ச்சையாக ஏதாவது பேசி அது மக்கள் மத்தியில் பிரபலமாகும். ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு பத்திர்க்கையாளர்களே அந்த வேலைகளை செய்கின்றனர்.
ஏனெனில் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்துமே யூ ட்யூப் மாதிரியான சமூக வலைத்தளங்களிலும் சேனல் வைத்துள்ளன. இந்த சேனலில் பதிவேற்றும் வீடியோக்களுக்கு சுவாரஸ்யமான டைட்டில் வைக்க வேண்டும் என்பதற்காகவே சர்ச்சையான கேள்விகளை கேட்கின்றனர்.
அங்கு சர்ச்சையாக எதுவும் நடக்காவிட்டாலும் கூட அவர்கள் அதை கேட்கிறார்கள். சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்காக நடந்த விழாவில் இப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அம்பி என்கிற திரைப்படத்திற்கான ப்ரெஸ் மீட் சமீபத்தில் நடந்தது.
அதில் தொகுப்பாளினியாக பேசிய பெண் திரைப்படம் குறித்து பேசியதற்கு நடுவே வெயில் காலத்தில் உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் ஆடையை குறிப்பிட்ட ஒரு பத்திர்க்கையாளர் நீங்கள் அணிந்திருக்கும் ஆடை கூட வெயில் காலத்திற்கு ஏற்ற ஆடைதான் போல என கேட்டிருந்தார். அந்த கேள்வியின் அர்த்தம் முதலில் தொகுப்பாளினிக்கு புரியவில்லை.
ஆனாலும் அவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க எனக்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் ஏன் இப்போதெல்லாம் இப்படி அத்துமீறி கேள்வி கேட்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
