Connect with us

அம்பானி மகன் கல்யாணத்தை மட்டும் கிராண்டாக நடந்த என்ன காரணம்!.. பின்னால் இருக்கும் கண்ணீர் கதை!.

facts about Anand Ambani

News

அம்பானி மகன் கல்யாணத்தை மட்டும் கிராண்டாக நடந்த என்ன காரணம்!.. பின்னால் இருக்கும் கண்ணீர் கதை!.

Social Media Bar

Anand Ambani: தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் தான். முகேஷ் அம்பானி தன் மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜியோ கட்டணமும் அதிகரித்து உள்ளது.

பலரும் முகேஷ் அம்பானி அவரின் மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்காக தான் நாட்டில் உள்ள அனைவருக்கும் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்து கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்துகிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

ஆனந்த் அம்பானியின் திருமணம்

கிட்டத்தட்ட ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு மட்டும் ரூபாய் 5000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதில் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு மட்டும் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பரிசாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

கடந்த ஒரு மாதமாக பல்வேறு ஆடம்பர நிகழ்ச்சிகள், வெளிநாடுகளில் இருந்து பல பிரபல பாடகர்கள் என ,, திருமணத்தை விமர்சையாக நடத்தி முடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

ambani

ஆனால் முகேஷ் அம்பானி அவரின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தை இவ்வளவு வெகு விமர்சையாக நடத்தவில்லை. அதற்கும் பல காரணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

யாரும் அறிந்திடாத ஆனந்த் அம்பானியின் மறுபக்கம்

ஆனந்த் அம்பானி தன்னுடைய சிறு வயது முதல் பல கஷ்டங்களை சந்தித்து வந்துள்ளார்.

முக்கியமாக அவரின் உடல் எடையை வைத்து பல கஷ்டங்களை அவர் அனுபவித்து வந்துள்ளார்.

ஆனந்த் அம்பானிக்கு சிறுவயதில் இருந்து ஆஸ்துமா பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. எவ்வளவு செலவு செய்தாலும் அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை.

மேலும் ஆனந்த அம்பானியின் ஆஸ்துமா பிரச்சனையை குணப்படுத்துவதற்காக சர்வதேச அளவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வந்தது.

பள்ளி காலங்களில் மற்ற மாணவர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளானார்.

பணம் இருப்பதால் இவர் இவ்வாறு பருமனாக இருக்கிறார் என்றும், இவரால் நடக்க கூட முடியவில்லை எனவும் பலரும் இவரை கிண்டல் செய்து வந்துள்ளனர்.

சிறுவயதிலிருந்தே இவரால் மற்ற பிள்ளைகளைப் போல எந்த விளையாட்டிலும் ஈடுபட முடியாமல் இருந்துள்ளார்.

மேலும் இவருக்கு உடல் எடை 200க்கும் மேல் அதிகரித்து நடக்கக்கூட முடியாமல் சென்றுவிட்டார்.

anant ambani images

ஆஸ்துமாவிற்காக சிகிச்சை எடுத்து வந்ததால், உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் சிரமப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக எந்த ஒரு சிகிச்சையும் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

பிறகு பல உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைத்தார் ஆனந்த் அம்பானி.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவரின் உடல் மீண்டும் பருமன் ஆகிவிட்டது இதற்கு காரணம் அவர் ஆஸ்துமாவிற்காக எடுத்த ஸ்டீராய்டு மாத்திரைகள் தான்.

ஸ்டீராய்டு மாத்திரைகளை நிறுத்திவிட்டால் மீண்டும் அவருக்கு ஆஸ்துமா ஏற்படும். அது பிரச்சினையில் கொண்டு போய் முடியும் என்பதால், அவர் மீண்டும் ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தார். இதனால் தான் ஆனந்த் அம்பானியின் உடல் பருமனாக உள்ளது.

எனவே தான் முகேஷ் அம்பானி, தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் தன்னுடைய மகனுக்காக உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு திருமணத்தை நடத்தி உள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
To Top