News
கமல்ஹாசன் குழந்தையை பார்த்து எம்.ஜி.ஆர் செய்த செயல்.. ஆடிப்போன கமல்!..
MGR: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களை நாம் பார்த்து வந்திருப்போம். அதில் ஒரு சில நடிகர்கள் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாகவே மக்களிடம் நிலைத்திருப்பார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு தனி சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர் நடிகர் எம் ஜி ஆர். இவரை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அரசியலிலும் தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தவர்.
தற்பொழுது இவர் நடிகர் கமல்ஹாசனின் மகள் சுருதிக்கு செய்த ஒரு செயல் பற்றி தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்திருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வள்ளல் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் சினிமா வாழ்க்கையில் தனக்கான ஒரு வரைமுறையை வைத்துக் கொண்டு நடித்தவர். அறிமுகமான படத்திலேயே மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். மேலும் சினிமாவில் சமூக நலன் கொண்ட பல கருத்துக்களை மக்களுக்கு தெரிவிப்பார்.
இதனால் ஒரு சில படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் எம். ஜி. ஆர். மக்களுக்கு நன்மை கொடுக்கும், சமூக கருத்துக்கள் உள்ள படங்களிலும் நடித்து வந்தார். மேலும் சினிமாவிலும், அரசியலிலும் தான் ஒரு ஹீரோ என்று நிரூபித்தார்.

சினிமாவில் பல விருதுகளை வாங்கி உள்ள எம்.ஜி.ஆர் அரசியலில் முதலமைச்சராகி மக்களுக்கு பல நல உதவிகளை செய்திருக்கிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாத நடிகராக மக்களின் மனதில் வாழ்ந்து வந்தார்.
கமல்ஹாசனின் மகளுக்கு எம்.ஜி.ஆர் செய்த செயல்
இதுகுறித்து பேட்டி ஒன்றில் தமிழா தமிழா பாண்டியன் கூறும் போது, எம்.ஜி.ஆர் ஒருமுறை கமல்ஹாசனுக்கு போன் செய்து உன்னுடைய மகளை அழைத்து வா பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார். கமல்ஹாசன் மகள் சுருதி கை குழந்தையாக இருக்கும் போது தூக்கிக்கொண்டு எம்.ஜி.ஆரை பார்க்க சென்றிருக்கிறார். ஸ்ருதியை வாங்கிய எம்.ஜி.ஆர் ஆசை தீர கொஞ்சிருக்கிறார். அதன் பிறகு உள்ளே சென்று ஜானகி அம்மாவின் நகைகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். சொல்லப்போனால் அது ஸ்ருதியின் எடைக்கு நிகரான நகைகள். அந்த நகைகளை அவர் கமல்ஹாசனிடம் கொடுத்திருக்கிறார்.

கமல்ஹாசன் திகைத்துப் போய் நின்றுள்ளார். எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு செல் என கூறியிருக்கிறார். கமல்ஹாசன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். பிறகு இந்த செயலை அங்கு உள்ளவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதுதான் எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் என தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
