News
12 ஹீரோக்களால் தமிழில் உதாசீனப்படுத்தப்பட்ட படம்..ரீமேக்கில் 100 கோடி ஹிட் எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். தற்போது வரை அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
அந்தப் படத்தின் கதை, அந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் என அனைத்துமே அந்த படத்திற்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்திருக்கும். மேலும் அந்தப் படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் தெரிய வரும் பொழுது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தமிழில் வெளிவந்த ஒரு திரைப்படம் அதன் பிறகு ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பல கோடி வசூல் செய்தது. தற்போது அந்த திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினி திரைப்படம்.
கஜினி திரைப்படத்தை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஏனென்றால் நடிகர் சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். மேலும் இந்த திரைப்படம் வெளிவந்து பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் அஜித், மாதவன், மகேஷ் பாபு உள்ளிட்ட 12 நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இந்த படத்தை நிராகரித்ததால் 13-வதாக சூர்யா இந்த படத்தில் நடித்தார்.
தமிழில் இந்த படம் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட் 7 கோடி.
ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட கஜினி
கடந்த 2008 ஆம் ஆண்டு கஜினி ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிகர் அமீர்கான் நடித்திருப்பார். ஆனால் அமீர்கானுக்கு முன்பாக இந்த படத்தில் நடிகர் சல்மான்கான் நடிக்க இருந்தது. ஆனால் இந்த படத்தின் ஸ்கிரிப்டை அவர் விரும்பாததால் நடிகர் அமீர்கான் நடித்தார். மேலும் இந்தத் திரைப்படம் ஹிந்தியில் 100 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது.
ஹிந்தியில் 100 கோடி வசூலை ஈட்டிய முதல் ஹிந்தி ரீமேக் திரைப்படம் என்ற சாதனையை கஜினி படம் பெற்றது.
