விஜய் சினிமாவை விட்டு போக போறது இல்லை!.. வெயிட்டிங்கில் நிற்கும் தயாரிப்பாளர்கள்!..

தமிழில் அதிக வசூல் கொடுக்கும் வசூல் நாயகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். தற்சமயம் இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.

மேலும் தொடர்ந்து தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டார். இந்த நிலையில் கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படத்தில்தான் நடிப்பார். அதற்கு பிறகு நிரந்தரமாக அரசியல் பணி செய்ய போகிறார் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

GOAT
GOAT
Social Media Bar

இந்த நிலையில் கில்லி மறு வெளியீடு தொடர்பாக விஜய்யை நேரில் சந்திப்பதற்காக சமீபத்தில் இயக்குனர் தரணி சென்றிருந்தார். அப்போது விஜய்யிடம் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்கும்படி கேட்டுக்கொண்டார் தரணி. விஜய்யும் அதற்கு ஒப்புக்கொண்டதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மியும் கூட விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருக்கான சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறார்.

அதே சமயம் ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கான உரிமம் தொகையை குறைத்துக்கொண்டே வருகின்றன. இதனால் அடுத்து விஜய் நடிக்கும் பட்சத்தில் அவரை வைத்து திரைப்படம் தயாரிப்பதில் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.