Connect with us

அந்த பாட்டுக்கு நான் மியூசிக் போடலை… யாரோ புரளியை கிளப்பி விட்டுருக்காங்க!.. வெளிப்படையாக கூறிய ஜி.வி பிரகாஷ்!..

GV prakash

News

அந்த பாட்டுக்கு நான் மியூசிக் போடலை… யாரோ புரளியை கிளப்பி விட்டுருக்காங்க!.. வெளிப்படையாக கூறிய ஜி.வி பிரகாஷ்!..

Social Media Bar

GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இசை அமைப்பாளர்களில் ஜிவி பிரகாசும் முக்கியமானவர். தனது 17வது வயதிலேயே வெயில் என்கிற திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்து மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்றவர் ஜி.வி பிரகாஷ்.

அதற்கு பிறகு அவர்கள் எக்கச்சக்கமான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன தன்னுடைய 25 ஆவது வயதிற்குள்ளாகவே 25 திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார் ஜி.வி பிரகாஷ். மேலும் தொடர்ந்து இயக்குனர் விஜய் இவருக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இசையமைப்பாளாரான பிறகு நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜிவி பிரகாஷ் தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் செலுத்தினார். அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றியை காணவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படங்களாக இருந்திருக்கின்றன.

இசை நடிப்பு என இரண்டையுமே கைவிடாமல் தொடர்ந்து அதில் பயணித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் உறவுக்காரர் ஆவார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அவர் ஏ.ஆர் ரகுமானுடன் பணி புரிந்ததாக சினிமா வட்டாரத்தில் சில பேச்சுக்கள் உண்டு.

அப்படியாக பாய்ஸ் திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் வேலை பார்த்த பொழுது அவருடன் ஜிவி பிரகாஷ் வேலை பார்த்ததாகவும் அதில் வரும் ஐயப்பன் பாடலை ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்தார் என்றும் சில பேச்சுக்கள் உண்டு. இது குறித்து தனது பேட்டியில் பதில் அளித்த ஜிவி பிரகாஷ் கூறும் பொழுது அந்த ஐயப்பன் பாடலை நான்  இசையமைக்கவில்லை.

பிரவீன் என்கிற ஒருவர் தான் இசையமைத்தார் என்று கூறிய ஜிவி பிரகாஷ் மேலும் கூறும்பொழுது நான் பாய்ஸ் திரைப்படம் வெளியாகிய பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் நான் சினிமாவிற்கு இசையமைக்கவே வரவில்லை பிறகு எப்படி நான் அந்த படத்தில் இசையமைத்திருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

To Top