Tamil Cinema News
படமே துவங்கலை.. அதுக்குள்ள ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்..!
தமிழ் சினிமாவில் விஜய்,அஜித்,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கவின் மணிகண்டன் மாதிரியான எத்தனையோ புதுப்புது நடிகர்கள் வந்த பிறகும் கூட இன்னும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது குறையவே இல்லை.
அப்போதைய காலகட்டங்களில் ரஜினிகாந்த் படங்கள் எப்படி பெரும் வெற்றியை கொடுத்ததோஅதே போல இப்போதும் கொடுத்து வருகின்றன அதனாலேயே தொடர்ந்து ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார்.
ரஜினிகாந்தின் ஒவ்வொரு திரைப்படம் வரும்போதும் இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்று மக்கள் பேசி வந்தாலும் ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் 2 அப்டேட்:
பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுக்கும் படங்களாகதான் இருந்து வந்துள்ளன. இதுவரை லோகேஷ் கனகராஜ் கொடுத்த படங்களை விடவும் கூலி படத்தின் வெற்றி பெரிதாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு இன்னும் துவங்கவே இல்லை.
ஆனால் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது எனவே சீக்கிரமே ஜெயலலிதா திரைப்படத்தின் படபிடிப்பு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் அடுத்த வருட துவக்கத்தில் தொடங்கினாலும் கூட சில மாதங்களிலேயே அந்த படத்தை முடிப்பதற்கு நெல்சன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கண்டிப்பாக அந்த திரைப்படம் அடுத்த ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வெளியாகும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
