நாம் ஹாலிவுட்டில் படம் பண்ணனும்! – ராஜமெளலியை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்!
சென்ற வருடம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்த இந்த படமானது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கு முன்பு இந்தியாவில் எடுக்கப்பட்ட எந்த ஒரு படமும் இப்படி ஒரு வரவேற்பை பெற்றதில்லை. இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தில் வரும் நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது.
இந்த நிலையில் அந்த படத்தை பார்த்து வியந்த பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ராஜமெளலியை பாராட்டியுள்ளார். அப்போது ஜேம்ஸ் கேமரூன் சொல்லும்போது இருவரையும் ஒருவர் நீர் என்றும் மற்றொருவரை நெருப்பு எனவும் காட்டி இருந்தது, அவர்களுக்கு இடையேயான நட்பு, படத்தில் காட்சிப்படுத்தியிருந்த விதம், இசை என படத்தில் அனைத்துமே பிரமாதமாக இருந்தது என ராஜமெளலியை பாராட்டியிருந்தார்.
மேலும் அந்த படத்தை தான் இரண்டு முறை பார்த்ததாக ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். அடுத்து ஒருவேளை ஹாலிவுட்டில் திரைப்படம் எடுக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும். மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறேன் என ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
பொதுவாக உலகம் முழுவதும் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமாதான் என நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் தென்னிந்திய சினிமாவிற்கு உலக அளவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார் இயக்குனர் ராஜமெளலி.
அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்